முத்தையாபுரம் அருகேலாரி மோதி தொழிலாளி பலி

முத்தையாபுரம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-13 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே உள்ள இடையர்காடு சம்படியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்.இவரது மகன் செந்தில்குமார் (வயது36). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டினில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் இவர் தூத்துக்குடியில் இருந்து பழையகாயல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற லாரி இவர் மீது மோதிவிட்டுநிற்காமல் சென்றது. இதில் பலத்த அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்