மயிலாடும்பாறை அருகேவிவசாயி வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு

மயிலாடும்பாறை அருகே விவசாயி வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது.

Update: 2023-09-05 18:45 GMT

மயிலாடும்பாறை அருகே ஆலந்தளிர் கிராமத்தை சேர்ந்தவர் மாலியன். விவசாயி. நேற்று இவர், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது கதவை திறந்த போது மேற்கூரை தகரத்திற்கு இடையே பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் அந்த பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்களால் பாம்பை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாலியன் மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் வீரபத்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 சாரைப்பாம்புகள் இருப்பதை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் போராடி மேற்கூரையில் இருந்த 7 அடி நீள சாரை பாம்பை பிடித்தனர். மற்ற 2 பாம்புகளும் கழிவு நீர் குழாய் வழியாக அருகில் இருந்த தோட்டப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. இதையடுத்து பிடிபட்ட சாரை பாம்பை கண்டமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்