கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் குரங்கன் ஓடை அருகே அழுகிய நிலையில் பிணம் ஒன்று கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'இறந்து கிடந்தவர் கொடுமுடி அருகே உள்ள சொட்டையூரை சேர்ந்த சரவணன் என்கிற மோகன்ராஜ் (வயது 45) ஆவார். கட்டிட தொழிலாளியான இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததும்,' தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.