காட்டுமன்னார்கோவில் அருகேடிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-19 18:45 GMT

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே கலியமலை வீராணம் ஏரி கரையோரம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காட்டுமன்னார்கோவில் காந்தியார் தெருவை சேர்ந்த டிரைவர் சக்திவேல்(வயது 40) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சக்திவேல் மனைவி தீபா அவருடைய கள்ளக்காதலன் வில்வகுளத்தை சேர்ந்த சுகுமார் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தீபா, சுகுமார், சண்டன் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தொரப்பு பெரியமேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சக்திவேல்(வயது 38) என்பவரையும் புத்தூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்