கண்டமனூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலிமனைவி: கண்முன் பரிதாபம்

கண்டமனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார்.

Update: 2023-10-03 18:45 GMT

கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. நேற்று முன்தினம் இவர், தனது மனைவியுடன் ஆண்டிபட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். அவரது மனைவி பின்னால் அமர்ந்திருந்தார். வருசநாடு-தேனி சாலையில் சுப்புலாபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிள் சென்றது.

அப்போது எதிரே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே மனைவி கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்