கழுகுமலை அருகேபா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
கழுகுமலை அருகே பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில், கூடுவோம்! கூட்டுவோம் தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கயத்தாறு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கி பேசினார். தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன், துணை தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.