கயத்தாறு அருகேசாைல ஓர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது

கயத்தாறு அருகே சாைல ஓர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.

Update: 2023-04-24 18:45 GMT

கயத்தாறு:

மேட்டூரில் இருந்து டேங்கர் லாரி ஒன்று ெநல்லைக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் ராஜாமுகமது(வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். கயத்தாறு அருகே பருத்திகுளம் நாற்கரசாலையில் வந்து கொண்டிருந்த இந்த லாரி, வளைவில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கங்கை கொண்டான் போலீசார் சென்று காயமடைந்த டிரைவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்