எட்டயபுரம் அருகேமுள்வேலியில் சிக்கி மயங்கிய ஆண் மயில் மீட்பு
எட்டயபுரம் அருகே முள்வேலியில் சிக்கி மயங்கிய ஆண் மயில் மீட்கப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள அயன் ராசாபட்டி கிராமத்தில் உள்ள வைப்பாற்று கரையோரம் உள்ள அடர்ந்த காட்டில் முள்வேலியில் 3வயது ஆண் மயில் ஒன்று சிக்கி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த கூலி தொழிலாளி கண்ணன் அந்த மயிலை மீட்டார். இதுகுறித்து அவர் மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் விளாத்திகுளம் வனத்துறையினர் விரைந்து வந்து தொழிலாளியிடம் இருந்த மயிலை பெற்றுக் கொண்டனர். அந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.