எட்டயபுரம் அருகேதடுப்பணை மேம்படுத்தும் பணிக்கு பூமி பூஜை
எட்டயபுரம் அருகே தடுப்பணை மேம்படுத்தும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கசவன்குன்று கிராமத்தில் கண்மாயில் உள்ள தடுப்பணையை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் தடுப்பணையை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்க மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.