எட்டயபுரம் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
எட்டயபுரம் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள சக்கிலிபட்டி கிராமத்தில் அய்யனார், கருப்பசாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு காலை 7 மணியளவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9 மணியளவில் புனித நீரால் அய்யனார், கருப்பசாமி மற்றும் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடந்த யாகசாலை பூஜையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.