திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு டிரைவர் பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு டிரைவர் பலியானார்
திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துறை அருகே ரெயில் தண்டவாளத்தில் இன்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர், ஏ.வெள்ளோடு அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி (வயது 33) என்பதும், அந்த வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.