தேவதானப்பட்டி அருகேகல்லூரி பஸ் மோதி தொழிலாளி பலி
தேவதானப்பட்டி அருகே கல்லூரி பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 40). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தேவதானப்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் டி.வாடிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.