தேவதானப்பட்டி அருகே முத்தையா கோவிலில் திருட்டு
தேவதானப்பட்டி அருகே முத்தையா கோவிலில் சுவாமி சிலையில் இருந்த நகை திருடுபோனது.
தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் பட்டாளம்மன் முத்தையா கோவில் உள்ளது. கடந்த 8-ந்தேதி இரவு வழக்கம்போல் பூசாரிகள் முத்துச்சாமி, முத்துக்குமார் ஆகியோர் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலை கோவிலை திறக்க பூசாரிகள் வந்தனர். அப்போது கோவில் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சாமி சிலையில் இருந்த 20 கிராம் வெள்ளி சங்கிலி திருடுபோய் இருந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.