கூடலூர் அருகேகுடிநீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள்

கூடலூர் அருகே குடிநீர் தேடி வனவிலங்கள் ஊருக்குள் வருகின்றன.

Update: 2023-02-26 18:45 GMT

 கூடலூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுரங்கனார் வனப்பகுதி, கழுதைமேடு புலம், பெருமாள் கோவில் புலம், ஏகலூத்து ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு விலை உயர்ந்த அரிய வகை மரங்கள் மற்றும் மான், குரங்கு, காட்டுபன்றிகள், கேளையாடு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அடிக்கடி சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மரங்களை வெட்டி கடத்துகின்றனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, குடிநீர் எளிதில் கிடைப்பது இல்லை. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வர தொடங்கி உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் தேடி வந்தபோது தனியார் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மிளாமான் மீட்கப்பட்டது. மேலும் ஊருக்குள் புகுந்த கேளையாடை பொதுமக்கள் விரட்டி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். எனவே தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் குடிநீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் குடிநீர் குட்டைகள் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்