கூடலூர் அருகேதோட்டத்திற்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை-விவசாயிகள் கவலை

கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-04-10 18:45 GMT

கூடலூர்

கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது இதனால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழைகள் சேதம்

கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பசுந்தீவனத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் வருகிறது. கூடலூர் அருகே பாடந்துரை மூச்சிகண்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை வந்தது.

தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த அனிஷ் என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பயிரிட்டு பராமரித்து வந்த வாழைகளை தின்றது. இதில் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள 50-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமானது. தொடர்ந்து பல விவசாயிகளின் பயிர்களையும் காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி வருவதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதில்லை. தற்போது கோடை காலமாக உள்ளதால் உணவு தேடி தினமும் ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினாலும் சில மணி நேரத்தில் மீண்டும் ஊருக்குள் வருகிறது.

இதனால் விவசாய பயிர்களை பாதுகாக்க முடியாமல் உள்ளது. தொடர் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சில வாரங்களில் அறுவடை செய்ய தயாரான வாழைகளை காட்டு யானை நாசம் செய்து விட்டது. எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்