சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பலி

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-09-01 17:02 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகசபை (வயது 53) விவசாயி. இவர் சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாடூரை சோ்ந்த மருதை(54) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை மருதை ஓட்டினார். அம்மையகரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஆத்தூரில் இருந்து சின்னசேலம் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கனகசபை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மருதை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்