சென்னிமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
சென்னிமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டுப்போனது.
சென்னிமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் திருட்டுப்போனது.
கருப்பணசாமி கோவில்
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சிறுக்களஞ்சி பகுதியில் பாதை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சென்னியப்பன் என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வலைவீச்சு
தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்துக்கு கோவில் நிர்வாகிகள் சென்று பாா்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. உடைக்கப்பட்ட உண்டியலில் ரூ.20 ஆயிரம் வரை காணிக்கை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.