போடி அருகேதொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

போடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மாற்றுத்திறனாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-05-18 18:45 GMT

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 56). மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (39). கூலித்தொழிலாளி. இவர், மோகனை அடிக்கடி கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடைேய தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ரமேஷ் நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த மோகன் தன்னை தான் திட்டுவதாக நினைத்து அருகில் இருந்த அரிவாளை எடுத்து ரமேசை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோகன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்