போடி அருகே மோட்டார்சைக்கிள்-ஜீப் மோதல்; தொழிலாளி பலி

போடி அருகே மோட்டார்சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்

Update: 2022-09-18 13:17 GMT

போடி கீழ்த் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் குரங்கணி அருகே பிச்சாங்கரையில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இன்று காலை இவர், போடியில் இருந்து மோட்டார்சைக்கிளில் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். போடி-முந்தல் சாலையில் குரங்கணி அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஜீப்பில் வந்த 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீப்பை ஓட்டி வந்த கேரள மாநிலம் சூரியநல்லியை சேர்ந்த செல்லத்துரை (வயது 49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்