ஆசனூர் அருகே கரும்பு லாரியை எதிர்பார்த்து நடுரோட்டில் நின்ற யானை

கரும்பு லாரியை எதிர்பார்த்து நின்ற யானை

Update: 2022-07-02 16:34 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையின் நடுவே வந்து நின்றது. மேலும் கரும்பு லாரியை எதிர்பார்த்து அங்கும் இங்குமாக ரோட்டில் சுற்றி திரிந்தது. ஆனால் கரும்பு லாரி வரவில்லை. இதனால் ரோட்டோரம் இருந்த மூங்கில் மரத்தை உடைத்து தின்றது. இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வெகுநேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்