ஆண்டிப்பட்டி அருகேகார்-மினிவேன் மோதல்; 6 பேர் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருகே காா-மினிவேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கட்டையம்பட்டி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் விஜய். இவர், குடும்பத்தினருடன் தேனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் காரில் மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர். காரை விஜய் ஓட்டினார். மதுரை-தேனி சாலையில் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் கார் மற்றும் மினி வேனில் வந்த சின்னமனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 26), மகரந்தன் (32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.