அந்தியூர் அருகே காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்து சாப்பிட்ட10 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

அந்தியூர் அருகே காட்டுப்பன்றி இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 10 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாாிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனா்.

Update: 2023-09-30 21:07 GMT

அந்தியூர் வனச்சரகர் முருகேசன் மற்றும் வனவர் சக்திவேல் அந்தியூர் அருகே பெருமாள்பாளையம் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது ேதாட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்து கிடந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி அனுமந்தன் என்பவர் தன்னுடைய தோட்டத்துக்கு காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்க சுருக்கு கம்பி கட்டி வைத்ததும், இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுப்பன்றி கம்பி வேலியில் சிக்கி இறந்ததும், பின்னர் அதன் இறைச்சியை சமைத்து நண்பர்கள் 9 பேருடன் சாப்பிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட வன அதிகாரி வெங்கடேசன் உத்தரவின் பேரில் அனுமந்தன் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு் வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்