அந்தியூர் அருகே மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பொங்கல் விழா

Update: 2023-04-01 21:02 GMT

அந்தியூரை அடுத்த வேம்பத்தி முனியப்பன்பாளைத்தில் பிரசித்தி பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோலிவின் பொங்கல் விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலையில் ஏராளமான பக்தர்கள் அந்த பகுதியில் பவானி ஆற்றுக்கு சென்று பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கோவிலை சென்றடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் பலர் ஆடு மற்றும் கோழியை பலியிட்டு தங்களுடைய நேர்த்திக்கடனையும் செலுத்தினா்.

இதில் ஆப்பக்கூடல், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், கரட்டுப்பாளையம் முனியப்பன்பாளையம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்