அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது

Update: 2022-07-01 15:38 GMT

 அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள கல்வாரை மலைக்கிராமத்தில் ஒருவர் தன்னுடைய வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து பர்கூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன், மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் தேவராஜ், சுப்பிரமணியம், சென்னிமலை மற்றும் போலீசார் கல்வாரை மலைக்கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது அந்த வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள், துப்பாக்கியில் பயன்படுத்தும் பால் குண்டுகள் ஆகியவற்றை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் அதே கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் (வயது 32) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கியை வைத்திருந்ததும்,' தெரியவந்து.

இதைத்தொடர்ந்து செல்லப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பால் குண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்