ஆனைமலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்- துணை தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

ஆனைமலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று துணை தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-09-27 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று துணை தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

வீட்டுமனை பட்டா

அனைமலை மற்றும் கம்பாலப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஆனைமலை துணை தாசில்தார் வாசுதேவனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கம்பாலபட்டி ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கம்பாலபட்டி ஊராட்சிக்குட்பட்ட 6 குக்கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்கள் தனியாக வீட்டுமனை இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒரே வீட்டில் மூன்று குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர். எனவே ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள ஆதிதிராவிடர் நத்தத்தில் காலியாக உள்ள இடங்களில் வீட்டுமனை இல்லாத ஆதிதிராவிடக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

பொதுமக்கள் சிரமம்

மேலும் ஆனைமலை பூலாங்கிணர் சாலையில் பஸ் நிறுத்தத்தின் அருகில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. பஸ் நிறுத்தத்தில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெண்கள் வந்து செல்கின்றனர். சில சமயத்தில் மதுபிரியர்களால் தொந்தரவு ஏற்படுகிறது. குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது. மேலும் பாசன கால்வாய்களில் மதுபாட்டில் மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றை உடைத்து வீசுகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்