மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
தர்மபுரி கருவூல காலனி மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது.
தர்மபுரி கருவூல காலனியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு துர்க்கை அம்மன் அலங்கார சேவை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.