அரசு கல்வியியல் கல்லூரியில் தேசிய பயிலரங்கம்

வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.

Update: 2023-05-11 14:32 GMT

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் கல்வியியல் ஆராய்ச்சி முறை என்ற தலைப்பில் 2 நாள் தேசிய பயிலரங்கம் நடக்கிறது. இதன் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் சா.தனலட்சுமி பேசினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நாகசுப்பிரமணி கலந்து கொண்டு ஆராய்ச்சி நெறிமுறைகள் எவ்வாறு செய்ய வேண்டும், எவ்வாறு இளம் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பது பற்றி சிறப்புரை ஆற்றினார்.

முடிவில் உதவி பேராசிரியர், மா.ராஜகுமார் நன்றி கூறினார்.

விழாவில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்