நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-24 16:17 GMT

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் தாமோதரன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்து தூய்மைப்படுத்தும் பணிக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கி பேசினார்.

7 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தூய்மைப்படுத்தல் பணி, ஹோமியோபதி மருத்துவம், வன உயிரினங்கள் முக்கியவம், யோகாவின் முக்கியத்துவம், சட்டப்பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் கடமைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இறுதியாக மரக்கன்று நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம், ஆசிரியர் சங்க செயலாளர் ஜான்வெலிங்டன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்