தூத்துக்குடி பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்
தூத்துக்குடி பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் 6 நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அத்திமரப்பட்டியில் தொடங்கியது. முகாமில் மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முகாம் தொடக்க விழாவில் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஸ்டேன்லி வேதமாணிக்கம், 55-வது வார்டு கவுன்சிலர் ராஜதுரை, ஊர் பிரமுகர்கள் மதியழகன், தானியேல், அகஸ்டின் ஜெபராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர், திட்ட அலுவலர் பிரட்ரிக் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் அத்திமரப்பட்டி பகுதிகளை தூய்மைப்படுத்துதல், ஆளுமைதிறன் வளர்த்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மின்வெளிக் குற்றம் விழிப்புணர்வு, சமூக உணர்வும், பொறுப்புகளும், இயற்கையை பேணல், சிறுசேமிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணிகள் நடைபெற உள்ளது.