நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
திருமருகல் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
திட்டச்சேரி:
திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதன் தொடக்க விழாவிற்கு திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், சேகல் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் சங்கர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், பொன்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முகாமையொட்டி டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், யோகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் வார்டு உறுப்பினர் ஹானஸ்ட் ராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜீவாராம்மோகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.