ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

Update: 2023-03-24 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் துறைத்தலைவர் கதிரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் தமிழ்துறை பேராசிரியர் சுயம்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகள் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டது. 'தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி' என்ற ஆய்வு நூலை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வெளியிட்டார். அதனை புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி தமிழ் துறைத்தலைவர் அரங்க முருகையன் பெற்று கொண்டார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு மைய இணை பேராசிரியர் வேல் கார்த்திகேயன் நிறைவுரையாற்றினார்.

கல்லூரி பல்வேறு துறைத்தலைவர்கள் ரமேஷ், சுந்தர வடிவேல், பாலு, ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், செந்தில்குமார், பேராசிரியர்கள் வசுமதி, மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், சேகர், செல்வகுமார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி, நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்