தேசிய ஊட்டச்சத்து மாத விழா
தேவகோட்டை முகமதியார்பட்டினம் நகராட்சி திருமண மண்டபத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை முகமதியார்பட்டினம் நகராட்சி திருமண மண்டபத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் பரமேஸ்வரி, 26-வது நகர மன்ற உறுப்பினர் சேக் அப்துல்லா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பஞ்சவர்ணம், மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் மரியஆன்சி, மேற்பார்வையாளர்கள் தனலெட்சுமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தனர், இதில் 6 மாத குழந்தை முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்தும் விதமாக உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், அரிசி வகைகள், கிழங்கு வகைகள், கீரை, காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் மருது பாண்டியன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன் குமார், வட்டார திட்ட உதவியாளர் ஜான் மாற்கு மற்றும் அங்கவன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.