தேசிய ஊட்டச்சத்து மாத விழா

சாயா்புரத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.

Update: 2022-09-03 12:29 GMT

சாயர்புரம்:

புதுக்கோட்டை ஆசிரியர் காலனி சத்துணவு மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி சரஸ்வதி தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஆயுஸ் மருத்துவ அதிகாரி முருகேசன், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை சுகாதார செவிலியர் ஜெயலட்சுமி, தூத்துக்குடி வட்டார குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி திலகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி சரஸ்வதி குழந்தைகள் வளர்ச்சி பற்றியும், ஊட்டச்சத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர்கள் அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார குழந்தைகள் திட்ட அதிகாரி திலகா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்