மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தேசிய கொடி

மானூர் யூனியன் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது.

Update: 2022-08-13 23:25 GMT

பேட்டை:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள் தோறும் கொடியேற்றும் வகையில், மானூர் யூனியன் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தேசிய கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா தலைமை தாங்கி, 20 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியேற்றும் வகையில் தேசிய கொடிகளை வழங்கினார். மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், முகமது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்