பொதுமக்களுக்கு தேசிய கொடி

வள்ளியூர் நகர பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது.

Update: 2022-08-12 21:33 GMT

வள்ளியூர்:

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை அமுத பெருவிழாவாக கொண்டாட மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் நாளை மறுநாள் வரை அனைத்து வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் தேசிய கொடியை பறக்க விட அரசு முடிவெடுத்துள்ளது. வள்ளியூர் நகர பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு கொடி ஏற்றுவதற்காக சுமார் 10 ஆயிரம் தேசியக் கொடிகளை நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில், நகர பஞ்சாயத்து தலைவி ராதா ராதாகிருஷ்ணன் அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், சுகாதார மேற்பார்வையாளர் டேனியல், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்