வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி

அம்பை நகராட்சியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-09 19:49 GMT

அம்பை:

அம்பை நகராட்சி சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைக்கிணங்க வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பை நகராட்சி புதுகிராமம் தெருவில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகரபாண்டியன் தலைமை தாங்கி அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடி வழங்கினார்.

மேலும் நகர வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து வர்த்தக நிறுவனங்களுக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், நகர வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகரன், பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்