அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் இறந்ததையொட்டி நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நேற்று மதுரை ெரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயில் முன்பு உள்ள பிரமாண்ட தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்ததை படத்தில் காணலாம்.