திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய மின்நூலக அமைப்பு கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய மின்நூலக அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்னார் மகளிர் கல்லூரியில் தேசிய மின்நூலக அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். கணிதவியல் துறை மாணவி எஸ்.சுஜிதா வரவேற்று பேசினார். தமிழ் பேராரிசியை ஐ.ஆனந்திபானு, 'தமிழ் இலக்கியத்தில் அறிவியல் கூறுகள்' என்ற தலைப்பில் பேசினார். வேதியியல் துறை மாணவி இ.அஜிநேசா நன்றி கூறினார். வணிகவியல் துறை மாணவி ஜி.ஹரிஸ்மா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் கணிதவியல், இயற்பியல், வேதியியல் துறை மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை தேசிய மின்நூலக அமைப்பு உறுப்பினர்களான பொருளியல் துறை பேராசிரியை எம்.சண்முகவல்லி, நூலகர் ஷ.உண்ணாமலை, வணிக நிர்வாகவியல் பேராசிரியை ரா.தெய்வவீரலட்சும் ஆகியோர் செய்திருந்தனர்.