தேசிய நுகர்வோர் தினவிழா

திருச்செந்தூரில் தேசிய நுகர்வோர் தினவிழா நடந்தது.

Update: 2022-09-03 12:33 GMT

திருச்செந்தூர்:

தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் சிறந்த சேவையை பாராட்டி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பனுக்கு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சிறப்பு விருதை மாநில தலைவர் மோகனசுந்தரம் வழங்கினார். மேலும், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் 15 போக்குவரத்து போலீசாருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை தூத்துக்குடி மாவட்ட சட்ட ஆலோசகர் வக்கீல் திலிப்குமார், திருச்செந்தூர் வட்டார சட்ட ஆலோசகர் வக்கீல் கணேசன், திருச்செந்தூர் நகர சட்ட ஆலோசகர் வக்கீல் கந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில தலைவர் மோகனசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், "திருச்செந்தூர் சன்னதி தெரு முகப்பில் பஸ்கள் நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் பஸ் நிறுத்தத்தை திருவாவடுதுறை ஆதீனம் மண்டபம் அருகில் அமைக்க வேண்டும். அதேபோல், திருச்செந்தூர் பந்தல்மண்டபம் பகுதியில் வாகனங்கள் நிற்பதுடன், மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கின்றனர். இதனால் நடந்தது செல்பவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதனால் பந்தல் மண்டபம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடந்து செல்ல மட்டும் அனுமதிக்கும் வகையில் தடுப்பு அமைக்க வேண்டும். திருச்செந்தூர் கோவில் தெருவில் தனியார் ஓட்டல் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் பக்தர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை சரிசெய்து அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்