நாராயண சுவாமி கோவில் தேரோட்டம்
களக்காடு சிதம்பரபுரத்தில் நாராயண சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சியும், 9-ம் திருநாளன்று அய்யா நாராயணசுவாமி பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் திருத்தேருக்கு எழுந்தருளினார். மதியம் 1.50 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.