நஞ்சேகவுண்டன்புதூர் எர்ரம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் வழிபாடு

நஞ்சேகவுண்டன்புதூர் எர்ரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள்கலந்துகொண்டனர்.

Update: 2022-09-11 16:44 GMT

நெகமம்

நெகமம் அருகே உள்ள நஞ்சேகவுண்டன்புதூரில் பழமையான எர்ரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான கோவில் என்பதால் கோவில் திருப்பணிகள் செய்து, முருகன், கன்னிமார், கருப்பராயனுக்கு புதுமேடை அமைத்து திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி  கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, உத்தரவு பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, மண் எடுத்தல், முளைப்பாரி வழிபாடு, காப்பணிவித்தல், மூல மூர்த்திகள் திருக்குடங்களை இடமாக கொண்டு வேள்வி சாலைக்கு எழுந்தருளச்செய்தல், வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, நடைபெற்று.திருப்பள்ளியெழுச்சி, காலை 7.15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலைச்சுற்றி வலம் வந்து விநாயகர், முருகன், கன்னிமார், கருப்பராயன், எர்ரம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்