நந்தனார் கோவில் குடமுழுக்கு

திருமருகல் அருகே நந்தனார் கோவில் குடமுழுக்கு

Update: 2023-06-25 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் நந்தனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா கடந்த 21-ந்தேதி தேவதா அனுக்ஞையுடன் தொடங்கியது. தொடர்ந்து 22-ந்தேதி தனபூஜையும், 23-ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாக சாலை பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து 24-ந்தேதி யாக சாலை பூஜை, விசேஷ சாந்தி தொடர்யாக ஹோமங்கள், பிரதிஷ்டை மருந்து சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது. நேற்று யாக பூஜை நடைபெற்று காலை 10.30 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு விமான குடமுழுக்கும், காலை 11.15 மணிக்கு மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. இரவு நந்தனார் வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்