'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சி

‘நம்ம ஊரு சூப்பரு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-08-26 17:59 GMT

கொரடாச்சேரி

தமிழகத்தில் உள்ள கிராம புறங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் "நம்ம ஊரு சூப்பரு" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராம, நகர்ப்புற பகுதியில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பஸ்நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவைகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் செம்மங்குடி எண்கண், அம்மையப்பன் ஆகிய ஊராட்சியில் தூய்மை பணி நடைபெற்றது. இதேபோல் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சி களிலும் தூய்மைப்பணி நடைபெற்றது. முன்னதாக கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வீடுதோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தும், நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவைகளை நாம் கையாள வேண்டும். வீடுதோறும் வந்து ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பும், நம் பகுதியின் தூய்மைக்கு உங்களுடைய பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருத்தல் வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்