விஜயதசமியையொட்டி நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் மாணவர்கள் சேர்க்கை
விஜயதசமியையொட்டி நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் மாணவர்கள் சேர்க்கை
நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் விஜயதசமியையொட்டி மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்தனர்.
இதனிடையே புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு, தமிழின் முதல் எழுத்தான அ என்னும் எழுத்தை குழந்தையின் கை விரலை பிடித்து அரிசியில் எழுதும் நிகழ்ச்சி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து அரிசியில் எழுத வைத்தனர். இந்த நிகழ்ச்சியல் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.