நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டன
நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டன
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 323 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அந்த மனுக்களை பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.