இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பேரவைக்கூட்டம் உடுமலை அனுஷம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் உடுமலை நகர செயலாளர் சி.தெய்வக்குமார் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.குணசேகரன், துணை செயலாளர்கே.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் எஸ்.பாஸ்கரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் ராஜன், எப்.ஐ.டி.யு.மாநில தலைவர் குணசேகரன், பொதுச்செயலாளர் மூர்த்தி, மாநில பொருளாளர் ரவீந்திரன்உள்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசுப்பொருட்களுடன் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது.ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் வழங்கும் ஓய்வூதிய தொகையைரூ.1,000-ல் இருந்து ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். கட்டுமான அமைப்பு சாராத்தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி வீடுகட்டி தரவேண்டும். மேலும்அவர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நில அளவை (சர்வே) செய்யப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். பொது இ-சேவை மையங்களைஅதிகப்படுத்தவேண்டும். நகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், ஓடைகளை தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.