திருச்செந்தூரில்நக்கீரர் தமிழ் மாநாடு

திருச்செந்தூரில்நக்கீரர் தமிழ் மாநாடு நடைபெற்றது.

Update: 2023-04-20 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சண்முகர் மஹாலில் நக்கீரர் தமிழ்ச்சங்கம் சார்பில் சங்ககால புலவர்கள் புகழ் போற்றும் வகையில் நக்கீரர் தமிழ் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு, நக்கீரர் தமிழ் சங்க ஆலோசனைக்குழு தலைவர் முத்து தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குனரும், சங்க ஒருங்கிணைப்பாளருமான யார்கண்ணன் முன்னிலை வகித்தார். சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். புலிப்பாணி சித்தரின் கரு வழி வாரிசு, ஆறுகால் பீடம், 13-வது பட்டம் துர்க்கா பீடாதிபதி சீர்வளர் சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் விழாவினை தொடங்கி வைத்து அருளாசி வழங்கி நூலினை வெளியிட்டார். நிகழ்ச்சிகளை கவிஞர் தமிழன் ராகுல்காந்தி தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில், குற்றாலம் பராசக்தி கல்லூரி முதல்வர் வேலம்மாள், பழநி புலிப்பாணி சித்த வைத்தியசாலை மருத்துவர் பன்னீர்செல்வம், பெங்களுர் எம்.ஜி.ஆர். நற்பணி மன்ற தலைவர் எம்.ஜி.ஆர்.மணி, அனைத்திந்திய செட்டியார் பேரவை மாவட்ட தலைவர் சுந்தர், செந்தூர் நண்பர்கள் நல அறக்கட்டளை தலைவர் செந்தில்வேல், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் கார்க்கி, திருச்செந்தூர் தமிழன்னை கோவில் நிறுவனர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் அருண்பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்