நாகர்கோவிலில் குடிநீர் திட்ட பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் மேயர் மகேஷ் தகவல்

நாகர்கோவிலில் குடிநீர் திட்ட பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

Update: 2022-06-09 20:50 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் குடிநீர் திட்ட பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் என்று மேயர் மகேஷ் கூறினார்.

நாகர்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வரும் தண்ணீர் முதலில் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப்பணி, குடிநீர் தொட்டி கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த திட்டத்திற்கு மேலும் ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.296 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது பொது மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்