நாகை சங்கமம் நிகழ்ச்சி
நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலைத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, போலீஸ் துறை ஆகிய துறை சார்ந்த விழிப்புணர்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, கூடுதல் கலெக்டர் பிரசாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.