நாகை நகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை நகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-04 18:45 GMT

நாகை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி மேலாளர் முத்துசெல்வம் தலைமை தாங்கினார். அலுவலர்கள் கருணாநிதி, கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். தமிழக அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து பணிகளையும் தனியார் மயமாக்க கூடாது. வருவாய் ஆய்வாளர்கள், பதிவரை எழுத்தர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஜாக்டோ ஜியோ மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஞானவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்